Friday 3rd of May 2024 04:50:52 AM GMT

LANGUAGE - TAMIL
"ராதே ஷ்யாம்"
பிரபாஸின் புதிய திரைப்படத்தின் முதல் பார்வை விளம்பரம் வெளியாகியது!

பிரபாஸின் புதிய திரைப்படத்தின் முதல் பார்வை விளம்பரம் வெளியாகியது!


பாகுபலி புகழ் பிரபாஸ் தற்போது நடித்து வரும் புதிய திரைப்படத்தின் முதல் பார்வை விளம்பரம் வெளியிட்டு வைக்கப்பட்டள்ளது.

ராதா கிருஷ்ணா இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே நடித்துவந்த புதிய படத்தின் பெயரும் முதல் பார்வை விளம்பரமும் இன்று படக்குழுவினரால் வெளியிடப்பட்டள்ளதை அடுத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதிக பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இப்படம் தயாராகவுள்ளது. மேலும் மற்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடவும் இருக்கிறார்கள். ஜில் படம் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராதா கிருஷ்ணா இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை விளம்பரத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு "ராதே ஷ்யாம்" என பெயரிட்டுள்ளனர். இப்படத்தின் முதல் பார்வை விளம்பரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE